Thursday, April 11, 2013

Bus Stop காதல்

புதிதாய் இரு சூரியன் உதித்தது
அவள் கன்னங்களில்
காதில் முடி சொருக - ஓரப்பர்வையில்
சிறு புன்னகை

சுற்றம் முழுதும் blur-அக
மெதுவாய் அவள் முகம் மட்டும் focus-இல்
இருவரும் வேறு திசைகள் பார்க்க
ஆசைகள் ஏனோ காந்தமாய் தீ பிடித்தன

அந்த இரு வினாடியில் - நிசப்தம் நிலவ
இதயதுடிப்புகளில் நில அதிர்வாய்
அவள் இமைகளுடன்,
துப்பட்டாவும் படபடத்தது

இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் பேருந்து ஓட்டுனருக்கு
தெரியதா? அவள் நீல துப்பட்டா கூட்டத்தில்
சிக்கி திணற, கண்களால் bye-சொல்லி ஏறினாள்.
அட! நம்ம வெள்ளை  துப்பட்டா இறங்குதே


No comments:

Post a Comment